Saturday 3 January 2009

Forever


சுதந்திரம்

தாத்தா சுதுமலையில் கொடியேற்றினார்
பேரன் கீரிமலையில் கப்பலோட்டினார்
தகப்பன் திருமலையில் கோபுரம் கட்டினார்
மகன் பாரெங்கும் அலைகின்றான்.

செந்நீர் பாய்ச்சி
உயிர்பல உரமிட்டு
துயர்மிக சுமந்து
இடர்பல பட்டு
நாம் வளர்த்த
விடுதலைப் பயிர் பற்றி
கண்ணீர் விட்டு
சுதந்திரப் போர்ப் பயிர்
வளரத்தோர்க்கு
புரியாமல் போனதென்ன

முடிவென்பது எங்கே? எப்போ?


பாரா முகங்கள் பாரெங்கும்
தீராப் பிரச்சினைகள் திசையெங்கும்
வாராத்துணைகள் வழியெங்கும்
ஊரா இது? உறவுதான் ஏது?

பங்காளிகள் பகையாளிகளாயினர்
போராளிகள் துரோகிகளாயினர்
நீதிபதிகள் நிலை தடுமாறினர்
தீர்க்க வந்தவர் தீர்த்துக் கட்டினர்

இரத்தத்தின் இரத்தம் மறைந்து விட்டது
உடன் பிறப்போ மறந்து விட்டது
தொண்டர்கள் தொலைவில் நிற்கின்றனர்
உறவெல்லாம் பெயர்ந்த புலத்தில்

மானிடம் இங்கே மரித்து விட்டது
இயற்கை இங்கே இறந்து விட்டது
விடியல் இங்கே விலகி நிற்கிறது
முடிவென்பது எங்கே? எப்போ?

வேண்டும் ஓரு புரிந்துணர்வு ஒப்பந்தம்



அவசரமாகச் செல்லும் பயணி நான்
அலுப்படிக்கும் சோதனைச் சாவடி நீ
முன்னேறத் தள்ளப்படும் படை நான்
முழங்காலைத் துண்டிக்கும் கண்ணி வெடி நீ
கண் விழித்துக் காத்திருக்கும் ராடார் நான்
கண்ணில் படாமல் பறக்கும் விமானம் நீ
ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது என் மனம்
நமக்குள் ஏன் இந்த யுத்த முனைப்பு
வேண்டும் ஓரு புரிந்துணர்வு ஒப்பந்தம்

Friday 2 January 2009

நவரசக் காதல்


உனைக் கண்டதும் என் மனதில்
வந்தது பெரும் ஆச்சரியம்.

தொடர்ந்தது என்னுடலெங்கும்
கடும் நோயாகக் காதல்

என் விழுங்கும் பார்வை
கொடுத்தது உனக்கு கோபம்.

விளைவு என் மனமெங்கும்
தாங்க வொணாச் சோகம்.

உணர்ந்து கொண்டாய் அதை நீ
மாறிக் கொண்டாய் சாந்தமாய்.

என் இரத்தத்தில் உறைந்திருந்தது
உருப்பெற்றது பெரு வீரமாக.

அங்கு மறைந்தது என்
மனதிலிருந்து பயம்.

நீயும் ஒத்திசைத்தாய் என்னோடு
வந்தது என் மேல் கருணை.

இருவர் மனதும் இணைந்தது
முடிந்தது திருமணத்தில் ஆனந்தமாய்.

Thursday 1 January 2009

Everything is her.


My nights are full of dreams
My dreams are nothing but her
My days are full of thoughts
My thoughts are nothing but her

My life is full of sorrows
My sorrows are caused by her
My aims are focused on her

Tuesday 30 December 2008

ஈழப் போர்




நிலம் பிடித்தேன் என்பாய் தினமும் - எமது

பலம் ஒடித்தாயா என்றாவது.

இடம் பிடித்தேன் என்பாய் தினமும் - எமது

திடம் ஒடித்தாயா என்றாவது.

உயிர் அழித்தேன் என்பாய் தினமும் - எமது

படை ஒழித்தாயா என்றாவது.

ஆறு மாதம் என்பாய் தினமும் - ஆண்டுகள்

நூறு போனாலும் முடியமா உன்னால்.

Monday 29 December 2008

A delivery



A mail comes with love, my heart will deliver it.
A mail comes with desire, my eyes will deliver it.
A mail comes from thought, my breath will deliver it.
A mail emerges from my dream, who will deliver it?

A poem oozed from my love to reach your heart.
A poem arises from my feelings to reach your body.
A poem withered from my thought to reach your mind.
A poem appeared in my dream to burn my soul

Sunday 28 December 2008

சிதைத்தோம் புதுமைக் கருக்களை.


வாழ்வுச் சந்தையில்
உணர்வுகளை விற்றோம்
போட்டிப் போதையில்
உறவுகளை மறந்தோம்
சீதனச் சிற்றன்னையால்
பெண்களை Cinderella ஆக்கினோம்
வீட்டுக்குள் நாய்கள் வரலாம்
மனிதர்களை அனுமதியோம்
வாழ்க்கைப் பாதையின்
வழக்கங்களை மாற்றோம்
சிந்தனைக் கர்ப்பத்தில்
சிதைத்தோம் புதுமைக் கருக்களை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...